தேசியம்
செய்திகள்

கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகல் – புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பு: Justin Trudeau

கனடாவின் Liberal கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் Justin Trudeau விலகுகிறார்.

கனடிய பிரதமர் Justin Trudeau தனது பதவி விலகல் திட்டத்தை திங்கட்கிழமை (06) காலை அறிவித்தார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ Rideau Cottage இல்லத்திற்கு வெளியே  நடைபெற்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தல் வெளியானது.

ஆனாலும்  புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிக்கப் போவதாக Justin Trudeau அறிவித்தார்.

Chrystia Freeland அமைச்சரவையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து பிரதமர் Justin Trudeau பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன.

Justin Trudeau பதவி விலக வேண்டும் என Quebec, Atlantic, Ontario, British Columbia மாகாணங்களின் Liberal கட்சி நாடாளுமன்ற குழுக்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்தன.

Justin Trudeau 2013 முதல் கனடாவின் Liberal கட்சியின் தலைவராகவும், 2015 முதல் பிரதமராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியது!!!

Gaya Raja

ஆண்டுதோறும் 100 மில்லியன் தடுப்பூசிகளை பல ஆண்டுகளுக்கு பெறக்கூடிய ஒப்பந்தங்கள்

Lankathas Pathmanathan

பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 61 வயது தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment