Justin Trudeau பதவி விலக வேண்டும் என Liberal கட்சியின் Quebec மாகாண நாடாளுமன்ற குழு அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமரின் தலைமை குறித்து பல மாத காலம் கேள்விகள் எழுந்த நிலை உள்ளது.
துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland அமைச்சரவையில் இருந்து விலகிய நிலையில் பிரதமரின் தலைமை மேலும் உறுதியற்றதாகி உள்ளது.
இந்த நிலையில் Justin Trudeau பதவி விலக வேண்டும் என Liberal கட்சியின் Quebec மாகாண நாடாளுமன்ற குழு கோரியுள்ளது.
Quebec மாகாண நாடாளுமன்ற குழு தலைவர் Stéphane Lauzon நத்தார், புதுவருட விடுமுறை நாட்களில் Quebec மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
இதில் Justin Trudeau பதவி விலக வேண்டும் என்பது Liberal கட்சியின் Quebec மாகாண நாடாளுமன்ற குழுவின் ஒருமித்த கருத்து என தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து Liberal கட்சியின் Quebec மாகாண நாடாளுமன்ற குழுவின் நிலைப்பாட்டை Stéphane Lauzon, தேசிய நாடாளுமன்ற குழுவின் தலைமைக்கு தெரியப்படுத்தினார்.
Liberal கட்சியின் Quebec மாகாண நாடாளுமன்ற குழு எதிர்வரும் வியாழக்கிழமை (09) மெய்நிகர் ஊடாக சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Atlantic Ontario மாகாணங்களின் Liberal கட்சி நாடாளுமன்ற குழுக்கள் ஏற்கனவே Justin Trudeau பதவி விலக வேண்டும் என ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளன.