எதிர்வரும் கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட Conservative கட்சியின் சார்பில் இரண்டாவது தமிழர் வேட்பாளராக தெரிவாகியுள்ளார்.
Markham Stouffville தொகுதியின் Conservative கட்சி வேட்பாளராக தமிழரான நிரான் ஜெயனேசன் தெரிவாகியுள்ளார்.
Conservative கட்சியின் Markham Stouffville வேட்பாளர் நியமனத் தேர்தல் சனிக்கிழமை (14) நடைபெற்றது.
இதில் போட்டியிட்ட வேட்பாளர்களில் நிரான் ஜெயனேசன் வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் Liberal கட்சி வேட்பாளர் Helena Jaczek வெற்றி பெற்றார்.
கடந்த பொதுத் தேர்தலில் Conservative கட்சியின் சார்பில் Ben Smith இந்த தொகுதியில் போட்டியிட்டார்.
முன்னாள் Toronto காவல்துறை அதிகாரியான நிரான் ஜெயனேசன், கடந்த நகரசபை தேர்தலில் Markham, Regional Councillor பதவிக்கு போட்டியிட்டவர்.
இந்த தேர்தலில் நிரான் ஜெயனேசன் 14,984 வாக்குகளை பெற்றிருந்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் Conservative கட்சியின் சார்பில் மூவர் வேட்பாளராகும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஏற்கனவே Conservative கட்சி சார்பாக Markham Thornhill தொகுதியில் லியோனல் லோகநாதன் வேட்பாளராக தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.