December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவில் உடனடி தேர்தலுக்கான அவசியம் இல்லை?

கனடாவில் உடனடி தேர்தலுக்கான அவசியம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி இந்த வாரம் தெரிவான நிலையில் இந்த கருத்து வெளியானது.

Donald Trump பெற்ற வெற்றியின் பின்னர், கனடாவில் திடீர் தேர்தலை நடத்த ‘அவசரம் இல்லை’ என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் October 2025க்கு முன்னர் நடைபெற வேண்டும்.

ஆனாலும் Justin Trudeau அரசாங்கத்தை கவிழ்க்க Conservative கட்சியின் சமீபத்திய முயற்சிகளால் அவசர தேர்தலுக்கான சாத்தியம் எழுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் NDP-Liberal கட்சிகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் முறிவு இந்த சாத்தியக்கூற்றை அதிகரித்துள்ளது.

பிரதமருக்கும் அவரது தலைமையிலான சிறுபான்மை அரசாங்கத்திற்கான ஆதரவு மிக குறைந்த அளவை அடைந்துள்ள நிலையில் Donald Trumpபின் தேர்தல் வெற்றி நிகழ்ந்தது.

ஒரு வருடத்திற்கும் மேலாக Conservative கட்சியை விட Liberal கட்சிக்கான மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது.

இதற்கிடையில், பிரதமர் பதவி விலக வேண்டும் என Justin Trudeauவின் சொந்த நாடாளுமன்ற குழுவில் இருந்தும் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

அமெரிக்க தேர்தல் முடிவை விட, கனடாவின் உள்நாட்டு அரசியல் இயக்கவியல் அடுத்த தேர்தல் வாக்கெடுப்பு நேரத்தை தீர்மானிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

விரைவில் தேர்தல் அறிவிக்கப்படுவது குறித்த நிச்சயமற்ற நிலை உள்ளது எனவும் அவர்கள் கூறினர்.

Donald Trump அமெரிக்க ஜனாதிபதியானது, கனடாவில் “ஒரு அமைச்சரவை மாற்றத்தை” தூண்டக் கூடும் எனவும் அவர்கள் கூறினர்.

கனடா-அமெரிக்க உறவுகளுக்கான அமைச்சரவைக் குழுவை மீண்டும் நிறுவுவதாக Justin Trudeau வியாழக்கிழமை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்ட சிறுபான்மை அரசு

Gaya Raja

Canada Post  நிர்வாகம் – தொழிற்சங்கம் இரண்டு வாரங்களில் முதல் தடவையாக சந்திப்பு

Lankathas Pathmanathan

19 வயதான தமிழ் இளைஞரின் மரணம் ஒரு கொலை: காவல்துறையினர் தகவல்

Lankathas Pathmanathan

Leave a Comment