தேசியம்
செய்திகள்

கனடாவில் நிகழ்ந்த வன்முறையில் இந்திய அரசின் மூத்த அமைச்சருக்கு தொடர்பு?

கனடாவில் இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் நடந்த வன்முறையில் பிரதமர் நரேந்திர மோடியின் மூத்த அமைச்சர் தொடர்புபட்டுள்ளார் என கனடிய அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

இந்த விடயத்தில் வெளியாகும் குற்றச்சாட்டுகளை கனடிய வெளிவிவகார இணை அமைச்சர் David Morrison உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய உள்துறை அமைச்சரும், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய ஆலோசகருமான Amit Shah கனடியர்கள் குறித்த உளவுத் தகவல்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாக கனடிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்த வன்முறை, மிரட்டல் பிரச்சாரத்தின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சர் இருந்ததாக கனடிய அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

தேசிய பாதுகாப்புக் குழுவில் செவ்வாய்க்கிழமை (29) நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தத் தகவலை David Morrison உறுதி செய்தார்.

கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள், கனடிய குடிமக்கள் குறித்த தகவல்களை இந்திய அரசாங்கம் இராஜதந்திர வழிகளிலும் ஏனைய வழிகள் மூலமும் சேகரித்ததற்கான ஆதாரம் கனடாவிடம் உள்ளது என கனடிய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Nathalie Drouin  கூறியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை RCMP பகிரங்க படுத்துவதற்கு முன்னதாக, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட முயற்சித்ததாக அவர் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளில் இந்திய அரசாங்கம் கனடாவுடன் ஒத்துழைக்காது என்பது தெளிவாகத் தெரிந்த பின்னர் இந்த விடயத்தை பொதுவெளியில் பகிர முடிவு செய்யப்பட்டது எனவும் அவர் கூறினார்.

June 2023இல் British Columbia மாகாணத்தில் சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில் இந்திய அரசாங்கத்தின் தொடர்புகள் உள்ளதான நம்பகமான ஆதாரங்கள் கனடிய அரசாங்கத்தின் இருப்பதாக பிரதமர் Justin Trudeau ஓராண்டுக்கு முன்னர் கூறியிருந்தார்.

கடந்த 14 ஆம் திகதி, கனடா இந்திய உயர் ஸ்தானிகர் உட்பட ஆறு தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.

இந்த விடயத்தில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள இந்திய அரசு, பதிலுக்கு ஆறு கனடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளது.

Related posts

Iqaluit சமூகத்தின் நீர் நெருக்கடி அவசர நிலையை சரிசெய்வதற்கான செலவை Liberal அரசாங்கம் செலுத்த வேண்டும்: Jagmeet Singh

Lankathas Pathmanathan

G20 நாடுகளின் கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளின் பங்கேற்பை எதிர்த்து கனடிய துணைப் பிரதமர் வெளிநடப்பு

Lankathas Pathmanathan

கனடாவில் இதுவரை 34,026 COVID மரணங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment