கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் Canadian Tamils’ Chamber of Commerce- CTCC) புதிய நிர்வாக சபை தெரிவானது.
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக Ari A. Ariaran தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (26) நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக் கூட்டத்தில் புதிய தலைவர் தெரிவானார்.
தொழில்முறை கணக்காளராக இவர், நீண்ட காலம் MP Accounting என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவராவார்.
Ari A. Ariaran, கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை தெரிவான 2024/2025 CTCC இயக்குநர்கள் குழு முழு விபரங்கள் :
President: Ari A Ariaran
Executive VP: Vithu Ramachandran
VP Internal Affairs: Patricia Peter
VP Finance: Suresh Tharmalingam
VP Membership: Dushy Christeen Seevaratnam
VP Community Relations: Kanchana Thuraisingam
Director: Rahulan Sana
Director: Mahen Singarajah
Director: Thiru Gobiraj