பிரதமரை பதவி விலகிக் கொள்ளுமாறு அடுத்த வாரம் நடைபெறும் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோர திட்டமிட்டுள்ளனர்.
அதிருப்தியில் உள்ள Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் Justin Trudeauவிடம் இந்த கோரிக்கையை முன்வைக்க திட்டமிட்டுள்ளனர்.
அடுத்த வாரம் புதன்கிழமை (23) Liberal கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை பதவி விலக கோரவுள்ளனர்.
இந்த விடயம் குறித்து பிரதமருடன் நேரடியாகப் பேசுவது எனவும், உரையாடல்களை தனிப்பட்ட வகையில் வைத்திருக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
அடுத்த தேர்தலில் கட்சியின் நலனுக்காக பிரதமர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை இந்தக் குழுவின் பிரதிநிதிகள் Justin Trudeauவிடம் வலியுறுத்தவுள்ளனர்.
Toronto, Montreal தொகுதிகளில் இடைத் தேர்தல் தோல்விகளை பிரதமர் அலுவலகம் கையாண்ட விதம் குறித்து அவர்கள் தங்கள் விரக்தியை பிரதமரிடம் வெளிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.