தேசியம்
செய்திகள்

கனடிய இராணுவ உறுப்பினர் Latviaவில் உயிரிழந்தார்!

Latviaவில் கனடிய இராணுவ உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.

தலைநகர் Rigaவில் கனடிய இராணுவ உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தது குறித்து Latvian மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் பணியில் இல்லாத போது மரணமடைத்தாக தெரியவருகிறது.

மரணமடைந்தவர் Captain Aaron Wideman என கனடிய ஆயுதப் படைகள் தெரிவித்தன.

இந்த மரணம் குறித்த விபரங்களை இராணுவத்தினர் வெளியிடவில்லை.

அவர் Latvian தேசிய ஆயுதப் படையில் நியமிக்கப்பட்டிருந்தார் என கூறப்படுகிறது.
NATO யுத்த குழுவை Latviaவில் கனடா வழிநடத்துகிறது.

ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த NATO யுத்த குழு செயல்படுகிறது.

Related posts

Quebec அமைச்சர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

Ontarioவில் குறைவடையும் எரிபொருளின் விலை

CUPE உறுப்பினர்களுக்கு எதிரான தொழிலாளர் வாரிய வழக்கு மீளப்பெறப்பட்டது

Lankathas Pathmanathan

Leave a Comment