கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்திய தூதர்கள் “கடுமையான தடைகளுக்கு” உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது
NDP தலைவர் Jagmeet Singh செவ்வாய்க்கிழமை (15) இந்த கோரிக்கையை முன் வைத்தார்
கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக அதிகாரிகளும் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக RCMP அண்மையில் குற்றம் சாட்டியது.
இதில் தொடர்புடையாத அடையாளம் காணப்பட்ட ஆறு இந்திய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக கனடிய அரசு அறிவித்துள்ளது
இந்த நிலையில் NDP தலைவரின் கருத்து வெளியாகியுள்ளது
கனடியர்களை பாதுகாப்பாக வைத்திருக்க எடுக்கக்கூடிய பிற நடவடிக்கைகளை ஆய்வு செய்யுமாறு நாடாளுமன்றத்தின் பொது பாதுகாப்புக் குழுவிடம் தனது கட்சி கோரும் என அவர் தெரிவித்தார்
சீக்கிய, முஸ்லிம் குழுக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்கு குற்றம் சாட்டப்பட்ட ஒரு இந்து குழுவையும் கனடா தடை செய்ய வேண்டும் என Jagmeet Singh கூறினார்.