Ansar Allah இயக்கத்தை ஒரு பயங்கரவாத குழுவாக தடை செய்யுமாறு Conservative கட்சி வலியுறுத்தியுள்ளது.
Houthis என பொதுவாக அழைக்கப்படும் Ansar Allah இயக்கத்தை ஒரு பயங்கரவாதக் குழுவாக அடையாளப்படுத்தி தடை செய்யுமாறு அரசாங்கத்தை Conservative தலைவர் Pierre Poilievre கோரியுள்ளார்.
இந்த தடையின் மூலம் கனடாவில் நிதி திரட்டல், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தடுக்கலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது கனடாவின் தார்மீகக் கடமையாகும் எனவும் அவர் கூறினார்
அப்பாவி இஸ்ரேலியர்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை Houthis மேற்கொள்வதாக Pierre Poilievre குற்றம் சாட்டினார்.
October 7 பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் 5,791 யூத எதிர்ப்பு சம்பவங்கள் கனடாவில் பதிவாகியுள்ளன.