September 19, 2024
தேசியம்
கட்டுரைகள் செய்திகள்

Paris Paralympics: இருபத்து ஒன்பது பதக்கங்களை வென்றது கனடா

2024 Paris Paralympics போட்டியில் பத்து தங்கப் பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது.

Paris Paralympics போட்டியில் மொத்தம் இருபத்து ஒன்பது பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது.

இதில் பத்து  தங்கப் பதக்கங்களும் அடங்குகின்றன.

தவிரவும், ஒன்பது  வெள்ளி, பத்து வெண்கலப் பதக்கங்களையும் கனடா கைப்பற்றியது.

இதன் மூலம் Paris Paralympics போட்டியில், 2020 Tokyo Paralympics போட்டியை விட அதிகம் பதக்கத்தை கனடா வெற்றி பெற்றுள்ளது.

Tokyo Paralympics போட்டியில் கனடா இருபத்து ஒரு பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது.
2016 Rio Paralympics போட்டியிலும் கனடா இருபத்து ஒன்பது பதக்கங்களை வெற்றி பெற்றது.

2012 London Paralympics போட்டியிலும் கனடா முப்பத்து ஒன்று பதக்கங்களை வெற்றி பெற்றது.

இம்முறை கனடா வெற்றி பெற்ற 10 தங்கப் பதக்கங்கள் Beijing 2008 போட்டிகளின் பின்னர் கனடா வெற்றி பெற்ற அதிக தங்கப் பதக்கங்களாகும்.

தங்கப் பதக்கங்கள் அடிப்படையில கனடா பதக்கப் பட்டியலில் 12வது இடத்தை இம்முறை பிடித்தது.
கனடா ஆறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்றது.

மொத்தம் 31 விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றனர்

நீச்சல் வீரர்களான Nicholas Bennett (இரண்டு தங்கம், ஒரு வெள்ளி), Aurelie Rivard (ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) ஆகியோர் தலா மூன்று பதக்கங்களை வென்றனர்.

கனடாவிற்காக அதிக பதக்கங்களை வென்றவர்கள் இவர்களாவார்கள்.

இம்முறை பதக்கம் வென்ற கனடியர்கள்:

தங்கப் பதக்கம்

  • Nicholas Bennett
  • Cody Fournie
  • Greg Stewart
  • Nicholas Bennett
  • Aurelie Rivard
  • Brent Lakatos
  • Sebastian Massabie
  • Cody Fournie
  • Austin Smeenk
  • Danielle Dorris

வெள்ளிப் பதக்கம்

  • Nicholas Bennett
  • Tess Routliffe
  • Aurelie Rivard
  • Brent Lakatos
  • Nathan Clement
  • Reid Maxwell
  • Jesse Zesseu
  • Brianna Hennessy
  • Nate Riech

வெண்கலப் பதக்கம்

  • Kate O’Brien
  • Aurelie Rivard
  • Keely Shaw
  • Alexandre Hayward
  • Leanne Taylor
  • Austin Smeenk
  • Katie Cosgriffe
  • Tess Routliffe
  • Shelby Newirk
  • பெண்கள் கைப்பந்து அணி

Paris Paralympics போட்டி ஞாயிற்றுக்கிழமை (08) முடிவுக்கு வந்தது.

இறுதி நாள் நிகழ்வில் கனடிய கொடியை Nicholas Bennett, Brianna Hennessy ஆகியோர் ஏந்திச் சென்றனர்.

Related posts

ரஷ்ய தூதரக விருந்தில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது: பிரதமர் Trudeau

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலியான ஆறாவது கனடியர்

Lankathas Pathmanathan

கனேடிய எல்லையில் PCR சோதனை தேவை -தலைமை பொது சுகாதார அதிகாரி

Gaya Raja

Leave a Comment