February 22, 2025
தேசியம்
செய்திகள்

தற்காலிக வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தில் கனடிய அரசு?

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

வேலை வாய்ப்பு அமைச்சர் Randy Boissonnault செவ்வாய்க்கிழமை (06) இந்தத் தகவலை வெளியிட்டார்.

தற்காலிக வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை புதிய விதிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.

கனடிய தொழிலாளர்களை பணியமர்த்துவதை தவிர்க்க தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை பயன்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.

தற்காலிக குடியிருப்பாளர்கள் கனடிய மக்கள் தொகையில் 6.8 சதவீதமாக உள்ளனர் என அண்மைய மக்கள் தொகை கணக்கெடுப்பு மதிப்பிடுகிறது.

Related posts

நான்காவது அலை குறித்த புதிய modelling விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகும்

Gaya Raja

Montreal நகரில் தாய், மகள் கொலை

Lankathas Pathmanathan

Markham விடுதியில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை

Lankathas Pathmanathan

Leave a Comment