தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய தலைவர் பதவி விலக்கல்?

  1. கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய நிர்வாக சபை தலைவர் பதவி விலக்கப்பட்டுள்ளாராம்.

வார விடுமுறையில் கூடிய நிர்வாக சபை இந்த முடிவை எடுத்துள்ளது என தகவல் அறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

இந்தப் பதவி விலக்கல் குறித்து அறியப்படுவது:

தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு அவருக்கு 24 முதல் 48 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தக் கோரிக்கைக்கு அவர் சாதகமாக பதிலளிக்கவில்லை. நிர்வாக சபை வார விடுமுறையில் நடத்திய அவசர கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்தப் பின்னணியில் தலைவர் பதவியில் இருந்தும், ஆலய உறுப்பினர் நிலையில் இருந்தும் அவரை நிர்வாக சபை பதவி நீக்கியுள்ளதாம்.

ஆனாலும் இந்தத் தகவலை ஆலய நிர்வாகம் பொது வெளியில் இதுவரை உத்தயோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தத் தகவலை ஆலயத்துடன் தொடர்புடைய இரண்டு வெவ்வேறு, அநாமதேய (பெயர் வெளியிட விரும்பாத) தரப்புகள் மூலம் தேசியம் பெற்றுக் கொண்டது. இதனை உறுதிப்படுத்த  ஆலயத்தையும், ஆலய நிர்வாக சபை தலைவரையும் தொடர்பு கொள்ள எடுத்த தேசியத்தின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதில் அவர்கள் தரப்பு கருத்தை பெற்றுக் கொண்டு விபரம் வெளியிட தேசியம் தயாராக உள்ளது.

ஐயப்பன் இந்து ஆலய நிர்வாக சபைத் தலைவராக K. தம்பிராஜா ஆலய இணையத்தில் பெயரிடப்பிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

——
2. கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய குருசாமியும், போசகருமான நாகலிங்கம் சுப்பிரமணியம், அவரது மனைவி கடந்த வருடம் February 24ம் திகதி அதிகாலைப் பொழுதில்  வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் யாழ்ப்பாணம் – அனலைதீவில் நிகழ்ந்தது.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற சில தினங்களில் அதனை கண்டித்து கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. கனடிய அரசும், இலங்கை காவல் துறையும் இணைந்து இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் பல தரப்பினரிடமிருந்து முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதல் குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கடந்த வாரம் கைதானார். கனடாவில் உள்ள ஐயப்பன் ஆலயம் ஒன்றின் தலைவரின் வழிநடத்தலில் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கைதான பெண் காவல்துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் அவர் காவல்துறையில் சமர்ப்பித்துள்ளாராம். இந்த வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மூவர் ஏற்கனவே  கைது செய்யப்பட்டனர்.

—–

3. கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய குருசாமி மீதான தாக்குதலுடன் தொடர்பற்றவர்கள் சிலரும் பொது வெளியில் தவறாக அடையாளம் காட்டப்பட்ட சம்பவங்கள் கனடாவில் நிகழ்ந்துள்ளன. ஐயப்பன் இந்து ஆலயத்துடன் தொடர்புடைய வேறு சில சம்பவங்களுடன் இந்தத் தாக்குதலை தொடர்புபடுத்தி வெளியான புனைவுகள் இதுபோன்ற தவறான அடையாளப்படுத்தலுக்கு காரணமாகியுள்ளது.

இந்த நிலையை தெளிவுபடுத்த வேண்டிய சமூகப் பொறுப்பு இதனுடன் தொடர்புடைய தனிநபர்கள், ஐயப்பன் இந்து ஆலய நிர்வாகம் ஆகியவர்களுக்கு உள்ளது.

—–
இவை ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவையாக இருக்கும் தன்மை அதிகம் உள்ளது – மாறாக இவை முற்றலும் தொடர்புபடாதவையாக இருக்கும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. இதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் உள்ளது. பொது வெளியில் இயங்குபர்களுக்கும், இயங்க முனைபவர்களுக்கும் இந்த அடிப்படை கடப்பாடு உள்ளது.
—-
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தும் பலருடன் பேசியதில் பெற்றவையே. மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட இந்த விபரங்கள் எவர் மீது குற்றம் சாட்டும் வகையில் அமைவதல்ல. இந்த விடயங்களுடன் தொடர்புடையவர்கள் இவற்றை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். இதற்கான வெளியை ஏற்படுத்த தேசியம் தயாராக உள்ளது.
——

தொடர்புபட்டவை:

இலங்கையில் கனடிய தமிழர் மீது வாள்வெட்டு

இலங்கையில் கனடிய தமிழர் மீது வாள்வெட்டு

கனடிய தமிழர் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம்

கனடிய தமிழர் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம்

கனடிய தமிழர்கள் மீது இலங்கையில் தாக்குதல் – பிரதான சந்தேக நபர் கைது?

கனடிய தமிழர்கள் மீது இலங்கையில் தாக்குதல் – பிரதான சந்தேக நபர் கைது?

ஐயப்பன் இந்து ஆலயம் முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு!

ஐயப்பன் இந்து ஆலயம் முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு!

Related posts

கனடிய தமிழர் பேரவை – CTC – நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும்!

Lankathas Pathmanathan

பாகம் 3 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

Lankathas Pathmanathan

COVID காரணமாக Brampton நகர Amazon பூர்த்தி மையம் மூடல் -பின்னணி என்ன?

Gaya Raja

Leave a Comment