December 12, 2024
தேசியம்
செய்திகள்

சுயநினைவு இழந்து வாகனத்தை குழந்தை பராமரிப்பு மையத்தில் மோதிய MPP!

குழந்தை பராமரிப்பு மையத்தின் மீது வாகனத்தை மோதிய Ontario மாகாண சபை உறுப்பினர் சுயநினைவு இழந்த சம்பவம் கடந்த வாரம்  நிகழ்ந்தது.

Barrie-Innisfil மாகாண சபை உறுப்பினர் Andrea Khanjin தனது வாகனத்தை Guiding Stars குழந்தை பராமரிப்பு நிலைய கட்டிடத்தின் மீது மோதியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (19) நிகழ்ந்த இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Andrea Khanjin, Ontario மாகாண சுற்றுச்சூழல் அமைச்சராவார்.

தனியார் இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக உறுதிப்படுத்திய காவல்துறையினர் இதில் குற்றச்சாட்டுக்கள் எதுவும்  சுமத்தப்படாது என கூறினர்.

இந்த சம்பவத்தின் பின்னர் மாகாண சபை உறுப்பினரின் நடவடிக்கை குறித்து குழந்தை பராமரிப்பு மையத்தின் பணியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இந்த விபத்து நிகழ்ந்தவுடன் Andrea Khanjin குழந்தை பராமரிப்பு மையத்திற்கு சென்று சேதத்தை பார்வையிட்டுள்ளார்,

ஆனால் அவரது அலுவலகம் அதே தொகுதியில் இருந்த போதிலும், சம்பவ தினத்தின் பின்னர் மாகாணசபை உறுப்பினர் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு நேரடியாக செல்லவில்லை என பணியாளர்கள் தெரிவித்தனர்.

கர்ப்பிணியான தான், அலுவலகத்தில் வாகனத்தை நிறுத்த முனைந்த போது சுயநினைவு இழந்ததாக குழந்தை பராமரிப்பு மையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் Andrea Khanjin குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், தனது மருத்துவரின் ஆலோசனைக்கு அமைவாக சில காலத்திற்கு வாகனம் ஓட்டுவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

ஆனால் இந்தக் கடிதத்தில் Andrea Khanjin மன்னிப்பு கோரவில்லை என்பதை குழந்தை பராமரிப்பு மைய பணியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Related posts

கனடாவை வந்தடைந்த முதலாவது COVID-19 தடுப்பூசி

Lankathas Pathmanathan

Ontarioவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் January முதல் booster தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: இரண்டாவது தங்கம் வென்றார் Summer McIntosh

Lankathas Pathmanathan

Leave a Comment