தேசியம்
செய்திகள்

காட்டுத்தீ சூழ்நிலையில் உதவ இராணுவத்தை அழைத்துள்ள Alberta

காட்டுத்தீ சூழ்நிலையில் உதவ கனடிய இராணுவத்தை Alberta மாகாணம் அழைக்கிறது.

மோசமடைந்து வரும் காட்டுத்தீ நிலைமைக்கு உதவுமாறு கனடிய ஆயுதப் படைகளுக்கு  Alberta மாகாணம் அழைப்பு விடுத்துள்ளது.

புதன்கிழமை (24) பிற்பகல் நிலவரப்படி, மாகாணத்தின் வன பாதுகாப்பு பகுதியில் 176 காட்டுத் தீ எரிகிறது.

இதில் Jasper தேசிய பூங்காவை அச்சுறுத்தும் இரண்டு காட்டுத்தீ உள்ளடக்கப்படவில்லை.

Alberta மாகாணம் கடும் காட்டுத்தீ எச்சரிக்கையை எதிர்கொள்கிறது என  பொது பாதுகாப்பு, அவசர சேவைகளுக்கான அமைச்சர் Mike Ellis கூறினார்.

இந்த சிக்கலான சூழ்நிலை Alberta வாசிகளின் ஆரோக்கியம், பாதுகாப்பை எவ்வாறு தொடர்ந்து பாதிக்கிறது என்பது குறித்து மத்திய அரசாங்கத்துடன் உரையாடியதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த காட்டுத் தீயை  எதிர்கொள்ள அனைத்து வளங்களும் உபயோகிக்கப்படுவதை உறுதி செய்ய கனடிய ஆயுதப் படைகளின் உதவியை கோரி உள்ளதாகவும் அமைச்சர் Mike Ellis உறுதிப்படுத்தினார்.

Related posts

Ontarioவில் mpox தொற்றுக்கள் அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Nova Scotiaவில் தடுப்பூசி வழங்கும் உதவியில் இராணுவம்

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு ஆதரவான ஒற்றுமை பேரணியில் பங்கேற்ற கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment