December 12, 2024
தேசியம்
செய்திகள்

தற்காலிக உடன்பாட்டை எட்டியது LCBO – வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது?

LCBO வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ளது.

இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த  கடைகள் செவ்வாய்க்கிழமை (23)  மீண்டும் திறக்கப்படும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது

சுமார் 10,000 ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்துடன் LCBO ஒரு தற்காலிக உடன்பாட்டை வெள்ளிக்கிழமை (19) எட்டியுள்ளது.

இது செவ்வாய் முதல் கடைகள் மீண்டும் திறக்க வழிவகை செய்கிறது.

LCBO வெள்ளி மதியம் இந்த தற்காலிக ஒப்பந்தத்தை அறிவித்தது.

ஆனாலும் இந்த தற்காலிக ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் வேலை நிறுத்தம் திங்கட்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது

இதன் மூலம் விற்பனை நிலையங்கள் மறுதினம் விற்பனைக்காக மீண்டும் திறக்கப்படும்.

இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அது குறித்த விவரங்கள் பகிரப்படும் என LCBO கூறுகிறது.

Ontario பொதுச் சேவை ஊழியர் சங்க (OPSEU) உறுப்பினர்களின் வேலை நிறுத்தம்  காரணமாக July 5 முதல் LCBO கடைகள் மாகாண ரீதியில் மூடப்பட்டுள்ளன.

Related posts

இலங்கை தார்மீக, பொருளாதார ரீதியாக திவாலான ஒரு நாடு: நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

ரஷ்யர்களுக்கு எதிராக புதிய தடைகளை அறிவித்த கனடா!

Lankathas Pathmanathan

Carbon வரி உயர்வு குறித்து அவசர நாடாளுமன்ற விவாதம் இல்லை!

Lankathas Pathmanathan

Leave a Comment