தேசியம்
செய்திகள்

Gardiner விரைவுச் சாலை விபத்தில் பெண் மரணம் – நால்வர் காயம்!

Gardiner விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

வியாழக்கிழமை (04) அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கு காரணமான இரண்டாவது வாகன சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் பலியானவர் 50 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், காயமடைந்தவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

கனேடிய விமான நிலையங்களில் தாமதங்களும் குழப்பங்களும் ஏற்படலாம்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் வேட்பாளர் கைது!

Lankathas Pathmanathan

கனரக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும்  உக்ரைனுக்கு அனுப்பிய கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment