தேசியம்
செய்திகள்

Jamaicaவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க கனடியர்களுக்கு எச்சரிக்கை 

Jamaica உட்பட சில நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு கனடிய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

Beryl சூறாவளி தென்கிழக்கு Caribbean தீவு நோக்கி வீசும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Beryl சூறாவளி காரணமாக Cayman தீவுகள், Jamaica, Saint Vincentடில் உள்ள Union தீவு, Grenadinesவில் உள்ள Grenadines Carriacou, Petite Martinique ஆகிய இடங்களுக்கு இந்த அத்தியாவசியமற்ற பயண எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

கனடியர்கள் Haitiக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டனர்.

சூறாவளி தவிர கடத்தல்கள், குழு வன்முறை, உள்நாட்டு அமைதியின்மை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த பயண எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.

Beryl சூறாவளி காரணமாக குறைந்தது ஏழு பேர் மரணமடைந்தனர்.

சூறாவளி காற்றால் பரவலாக சொத்துக்கள், சுற்றுச்சூழல் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

Beryl புயல் புதன்கிழமை (03) Jamaicaவை தாக்கும் என எச்சரிக்கப்பட்டது.

Haitiயில் 3,162 கனடியர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Cayman தீவுகளில் 1,524 பேர், Jamaicaவில் 1,625,  Saint Vincent and the Grenadinesசில் 236, Grenadaவில் 341 கனடியர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை பதிவு செய்யத் தேர்ந்தெடுத்தவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுவர் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan

Saskatchewan முதற்குடி சமூகத்தில் 93 அடையாளம் காணப்படாத கல்லறைகள்

Lankathas Pathmanathan

British Colombiaவில் தொடரும் வெள்ள மீட்புப் பணிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment