தேசியம்
செய்திகள்

கனடிய ஆயுதப் படையின் உயர் பதவிக்கு முதல் பெண் நியமனம்

கனடிய பாதுகாப்பு படைகளின் தலைவராக Lieutenant General Jennie Carignan நியமிக்கப்பட்டார்.

இதன் மூலம் கனடிய ஆயுதப் படையின் உயர் பதவி வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

மத்திய அரசாங்கம் புதன்கிழமை (03) இந்த அறிவித்தலை வெளியிட்டது.

Jennie Carignan தற்போது இராணுவத்தின் தொழில்முறை நடத்தை பிரிவின் தலைவராக – chief of professional conduct and culture – உள்ளார்.

இந்தப் பதவி பாதுகாப்பு படைகளில் முன்வைக்கப்பட்ட பாலியல் நடத்தை தவறு நெருக்கடியை அடுத்து உருவாக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதால், பல உயர்மட்ட தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தனது 38 ஆண்டுகால இராணுவ வாழ்க்கையில், Jennie Carignan கனடிய இராணுவத்தில் ஒரு போர் படைக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி ஆனார்.

July 18 நடைபெறும் விழாவில் Jennie Carignan அதிகாரப்பூர்வமாக ஆயுதப் படைகளின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.

Related posts

$300 மில்லியன் Fiano மீட்பு நிதி அறிவித்தல்

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: நிறைவு நிகழ்வில் கனடிய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் Summer McIntosh, Ethan Katzberg

Lankathas Pathmanathan

கடவுச்சீட்டுக்கு போலி பயணத் திட்டங்களை தவிருங்கள்: அமைச்சர் கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment