தேசியம்
செய்திகள்

செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்த முதல்வர்

Ontario Science திடீரென மூடப்பட்டது குறித்த செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதல்வர் Doug Ford தவிர்த்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (21) முதல் Ontario Science Centre பொதுமக்கள் பாவனைக்கு மூடப்பட்டது.

கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Doug Ford அரசாங்கம் அறிவித்தது

ஆனாலும் இந்த விடயம் குறித்து புதன்கிழமை செய்தியாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதல்வர் தவிர்த்தார்.

தொழிலாளர் பாராட்டு தினத்திற்கு Mississauga நகரில் உள்ள Pearson சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் கலந்து கொண்டார்.

1969 இல் திறக்கப்பட்ட Ontario Science Centre எதிர்வரும் குளிர்காலத்தில் கூரையில் செயல் இழக்கும் அபாயம் உள்ளதாக பொறியியல் நிறுவனம் Rimkus Consulting Group தெரிவித்தது.

ஆனாலும் Ontario Science Centre மூடப்படுவதை எதிர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

Save Ontario’s Science Centre (அல்லது Save  OSC) என்ற அமைப்பு இந்தப் பேரணியை முன்னெடுக்கிறது.

Related posts

ரஷ்யாவிற்கு எதிரான மேலும் வர்த்தக நடவடிக்கை

Lankathas Pathmanathan

Pickering துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழர் மரணம்

New Brunswick மாகாணத்தில் புதிய கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள்

Gaya Raja

Leave a Comment