தேசியம்
செய்திகள்

ஹமாசுடன் தொடர்புடைய உதவிக் குழுவின் முன்னாள் ஊழியருக்கு நாடு கடத்தல் உத்தரவு

ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய உதவிக் குழுவின் முன்னாள் ஊழியரை நாடு கடத்த கனடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

கனடிய குடிவரவு நீதிமன்றம் இந்த நாடு கடத்த உத்தரவை விடுத்துள்ளது.

Mississauga, Ontarioவை தளமாக கொண்ட ஹமாசுடன் தொடர்புடைய நிவாரணக் குழுவில் பணிபுரிந்த பாலஸ்தீனிய பெண்ணை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக Majeda Sarassra கனடாவிற்கு அனுமதிக்கப்பட முடியாதவராக கருதப்பட்டார்

பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் IRFAN-Canada அமைப்பின் உறுப்பினர் என்ற காரணத்தால்
குடிவரவு மேல்முறையீட்டு பிரிவு, 45 வயதான அவருக்கு எதிராக தீர்ப்பளித்தது

January 12 வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அவர் மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்துள்ளார்.

கனடிய அதிகாரிகள் IRFAN-கனடாவின் தொண்டு அந்தஸ்தை 2011 இல் பறித்தனர்

ஹமாசுடன் தொடர்புடைய குழுக்களுக்கு 14.6 மில்லியன் டொலர்கள் அனுப்பியதாக கண்டறியப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

2014 இல், கனடிய அரசாங்கம் IRFAN-கனடாவை அதன் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது

ஹமாசுக்கு நிதியளிக்க அதன் “தொண்டு நிறுவன அந்தஸ்தை” பயன்படுத்தியதற்காக IRFAN-கனடாவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

2016 இல் கனடாவில் அகதி அந்தஸ்து கோருவதற்கு முன்னர் Majeda Sarassra, West Bank நகரமான  Bethlehemமில் IRFAN-கனடாவில் பகுதி நேரமாக பணியாற்றினார்.

ஆனாலும் தான் கனடாவுக்கு வரும் வரை IRFAN-கனடா பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டது என்பது தனக்கு தெரியாது என அவர் கூறினார்.

Related posts

காசாவில் மற்றொரு கனடிய பிரஜை காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan

Quebec பேருந்து விபத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Ontario அரசாங்கம் மில்லியன் கணக்கான COVID தடுப்பூசிகளை வீணடித்துள்ளது!

Lankathas Pathmanathan

Leave a Comment