December 12, 2024
தேசியம்
செய்திகள்

மத்திய பல் மருத்துவ திட்டத்திலிருந்து Alberta விலகல்

மத்திய பல் மருத்துவ திட்டத்திலிருந்து Alberta மாகாணம் விலகுகிறது.

Alberta முதல்வர் செவ்வாய்க்கிழமை (25) கனடிய அரசாங்கத்திடம் இந்த தகவலை தெரிவித்தார்.

கனடிய பல் பராமரிப்பு திட்டம் (Canadian Dental Care Plan – CDCP) மாகாண அதிகார வரம்பை மீறியதாக முதல்வர் Danielle Smith பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறினார்.

மத்திய அரசாங்கத்தால் ஒரு புதிய சுகாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமானால், அது மாகாணங்கள், பிரதேசங்களின் முழு ஒத்துழைப்புடன் செய்யப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரத் திட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே  விவாதங்கள் நடந்திருக்க வேண்டும் என தெரிவித்த Danielle Smith துரதிர்ஷ்டவசமாக, இது நடைபெறவில்லை என சுட்டிக் காட்டினார்.

மத்திய பல் மருத்துவ நிதியில் மாகாணத்தின் பங்குக்கான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த Alberta முயல்கிறது.

குறைந்த வருமானம் கொண்ட Alberta வாசிகளுக்கு பல் மருத்துவத்தை விரிவுபடுத்த இந்த நிதியைப் பயன்படுத்த Alberta அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Related posts

COVID தடுப்பூசிகளுக்கு புதிய பெயர்கள்: அங்கீகரித்தது Health கனடா!

Gaya Raja

கனடாவில் உள்ள Belarus தூதரகம் மூடப்படுகிறது!

Gaya Raja

Stanley Cup: மூன்று கனடிய அணிகளில் ஒன்று மாத்திரம் முதலாவது ஆட்டத்தில் வெற்றி

Leave a Comment