தேசியம்
செய்திகள்

ரஷ்யா மீது இனப்படுகொலை குற்றச் சாட்டை முன்வைக்கும் கனடிய பிரதமர்

உக்ரேனிய குழந்தைகளை சிறைபிடிக்கும் இனப்படுகொலைக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என Justin Trudeau தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் அமைதி மாநாட்டில் பிரதமர் Justin Trudeau பங்கேற்கிறார்.

ஆயிரக்கணக்கான உக்ரேனிய குழந்தைகளை அவர்களின் வீட்டில் இருந்து அழைத்துச் சென்று அவர்களின் உக்ரேனிய அடையாளத்தை அழிக்க முயற்சிப்பதன் மூலம் ரஷ்யா இனப்படுகொலையை நிகழ்த்தியதாக செய்தியாளர்களிடம் பிரதமர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் இனப்படுகொலையின் ஒரு அங்கத்திற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என கனடிய  பிரதமர் கூறினார்.

இதனை காலனித்துவம் என கூறிய கனடிய பிரதமர், இதற்கு ரஷ்யா பொறுப்புக் கூற வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த வார விடுமுறையில் நடைபெறும் உக்ரைன் அமைதி மாநாட்டில் 90 உலக நாடுகள் பங்கேற்கின்றன.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் விவாதங்களை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நிகழ்கிறது.

இதில் நடைபெற்ற போரின் மனித பரிணாமம் குறித்த அமர்வுக்கு நோர்வேயுடன் இணைந்து Justin Trudeau தலைமை தாங்கினார்.

இந்த அமர்வு போர்க் கைதிகள், பொது கைதிகள், நாடு கடத்தப்பட்ட குழந்தைகள் குறித்து கவனம் செலுத்தியது.

ரஷ்யா இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் உக்ரைனின் கோரிக்கைக்கு சர்வதேச சமூகத்தை அணி திரட்டுவதற்கான அடையாள முயற்சியாகவே இந்த மாநாடு அமைகிறது.

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பல தலைவர்கள் உலகில் எல்லா இடங்களிலும் சர்வதேச சட்டத்தை நிலை நிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கனடிய பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, பிரதமர் அதற்கு நேரடியாக பதிலளிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ள Metro

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கான தூதரக சேவைகள் போலந்தில் தொடரும்

Lankathas Pathmanathan

அதிகரிக்கும் வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan

Leave a Comment