தேசியம்
செய்திகள்

கனடிய சர்வதேச அபிவிருத்தி துணை அமைச்சர் – இலங்கை வடமாகாண ஆளுநர் சந்திப்பு

கனடாவுக்கான சர்வதேச அபிவிருத்தி துணை அமைச்சர் Chris MacLennan இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

கடந்த ஒரு தசாப்தத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட கனடாவுக்கான சர்வதேச அபிவிருத்தி உயர் நிலை அமைச்சர் இவராவார்.

இந்த பயணம் இருதரப்பு உறவையும் எமது நீண்ட கால வளர்ச்சி ஒத்துழைப்பையும் மேம்படுத்த உதவுகிறது என இலங்கைக்கான கனடிய தூதரகம் தெரிவித்தது.

அரசாங்கம், தனியார் துறை, சிவில் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை Chris MacLennan முன்னெடுத்தார்.

இந்த சந்திப்புகளில் அபிவிருத்தி நகர்வுகளை ஆதரிப்பதில் கனடாவின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட Chris MacLennan அங்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்சை சந்தித்தார்.

கனடாவின் ஆதரவில் செயல்படும் கண்ணிவெடி அகற்றும் தளத்திற்குச் சென்ற அவர், பெண் தொழில்முனைவோர், சமத்துவம், நல்லிணக்க தலைவர்களையும் சந்தித்தார்.

Related posts

கனடியர்களின் சவால்களை எதிர்கொள்ள பொது அறிவு கொள்கைகளை வலியுறுத்தும் எதிர்கட்சி தலைவர்

Lankathas Pathmanathan

Ontario மாகாண அமைச்சரவையில் தமிழர்!

Lankathas Pathmanathan

Toronto பெரும்பாகத்தில் எரிபொருள் 12 சதம் குறைவு

Leave a Comment