தேசியம்
செய்திகள்

சமூக ஊடக தளங்களுக்கு எதிராக மேலும் ஐந்து Ontario பாடசாலை வாரியங்கள் வழக்கு

சமூக ஊடக தளங்களுக்கு எதிராக மேலும் ஐந்து Ontario பாடசாலை வாரியங்கள் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளன.

Snapchat, TikTok, Facebook உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு எதிராக மேலும் ஐந்து Ontario பாடசாலை வாரியங்களும், இரண்டு சுயாதீன தனியார் பாடசாலைகளும் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளன.

இது குறித்த வழக்கு முதலில் கடந்த March மாதத்தில் நான்கு Ontario பாடசாலை வாரியங்களால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் புதிதாக Dufferin-Peel மாவட்ட கத்தோலிக்க பாடசாலை வாரியம், York மாவட்ட கத்தோலிக்க பாடசாலை வாரியம், Trillium Lakeland மாவட்ட பாடசாலை வாரியம், Ottawa மாவட்ட கத்தோலிக்க பாடசாலை வாரியம், Niagara மாவட்ட பாடசாலை வாரியம் ஆகியன இணைந்துள்ளன.

தவிரவும் Mississaugaவில் உள்ள Holy Name of Mary கல்லூரி, North Yorkகில் உள்ள Eitz Chaim பாடசாலை ஆகிய இரண்டு தனியார் பாடசாலைகள் இந்த வழக்கில் இணைந்துள்ளன.

கடந்த March மாதம் Toronto மாவட்ட பாடசாலை வாரியம், Peel மாவட்ட பாடசாலை வாரியம், Toronto மாவட்ட கத்தோலிக்க பாடசாலை வாரியம், Ottawa Carleton மாவட்ட பாடசாலை வாரியம் ஆகியவை வழக்கு தொடர்வதாக அறிவித்தன.

மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும், கல்வி முறைக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி சமூக ஊடக தளங்களுக்கு எதிராக 4.5 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு COVID Booster தடுப்பூசிகள் பரிந்துரை

Gaya Raja

கனடா நோக்கி பயணித்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மூழ்கிய படகில் இருந்து மீட்பு?

Lankathas Pathmanathan

கனடா மீது சீனா குற்றச்சாட்டு!

Gaya Raja

Leave a Comment