தேசியம்
செய்திகள்

கனடிய பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்!

பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் கனடிய பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் முன்னெடுக்கப்படுகின்றன.

இஸ்ரேலுடன் இராணுவ உறவுகளை கொண்டுள்ள நிறுவனங்களிலிருந்து கல்வி நிறுவனங்கள் விலகி இருக்க கோரி கனடிய பல்கலைக்கழகங்களில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

வார இறுதி முதல் Montreal லில் உள்ள McGill பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள்  முகாம்களை அமைத்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இஸ்ரேலுடன் தொடர்பு  கொண்டுள்ள  நிறுவனங்களில் இருந்து McGill பல்கலைக்கழகம் விலக வேண்டும் என மாணவர்கள் கோருகின்றனர்.

மாணவர்களின் இந்த நகர்வுகள் பல்கலைக்கழக கொள்கைகள், சட்டம் ஆகியவற்றை மீறுவதாக McGill பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த முகாம்களை அங்கீகரிக்கவில்லை என பங்கேற்பாளர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் காவல்துறையின் உதவியை McGill பல்கலைக்கழக நிர்வாகம் கோரியுள்ளது.

இந்த நிலையில் தமது வளாகத்தில் இதுபோன்ற போராட்ட முகாம்களை அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என Toronto பல்கலைக்கழகம் மாணவர்களை எச்சரிக்கிறது.

சுதந்திரமான பேச்சுரிமையை மதிப்பதற்கும் , சட்டபூர்வமான அமைதி போராட்டங்களுக்கு இடமளிப்பதாகும் Toronto பல்கலைக்கழகம் உறுதியளித்துள்ளது.

ஆனாலும் “அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகளை” பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளாது எனவும் அதன் கொள்கைகளை மீறும் மாணவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Toronto Metropolitan பல்கலைக்கழகத்தில் (TMU) ஒரு மணி நேர உள்ளிருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது.

இதன் காரணமாக மறு அறிவித்தல் வரை, தமது வளாகக் கட்டிடங்களுக்கான செல்வதை TMU கட்டுப்படுத்தி உள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக TMU நிர்வாகம் தெரிவித்தது.

Related posts

மீண்டும் பணிக்கு திரும்பிய Canada Post ஊழியர்கள்!

Lankathas Pathmanathan

உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை நீட்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment