தேசியம்
செய்திகள்

கனடாவில் ஏழு தொகுதிகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள் தேர்தல்!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் தேர்தல் கனடாவில் ஏழு தொகுதிகளில் மாத்திரம் நடைபெறவுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் கனடாவில் அறிவிக்கப்பட்டது.

கனடாவுக்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் இந்த பட்டியலை அறிவித்தது.

மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மிகவும் கடுமையான தேர்வு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு  இறுதி  செய்யப்பட்டுள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாவுக்கான தேர்தல் ஆணையாளர் சிவபாலன் பாலசுந்தரம் ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

May மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் கனடாவிலிருந்து 25 உறுப்பினர்கள் தெரிவாக இருந்தனர்.

ஆனாலும் 15 தொகுதிகளில் ஒரு வேட்பாளர் மாத்திரம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அரசவை உறுப்பினர்களாக தெரிவானார்கள்.

இந்த நிலையில் ஏழு தொகுதிகளில் இரண்டு வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

தவிரவும் மூன்று தொகுதிகளில் எவரும் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை என கனடாவுக்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல்:

Riding # Candidate Riding name
1 Jacob Arulrajah East Coast NS,NB,PEI
2 Yogendran Vaiseegamagapathy Ottawa – Ottawa and Cornwall
3 Mariajerom Mariyanayagam Quebec – Laval and Montreal North
4 Jeyathasan Kurukularajah Quebec – Montreal
5 Reginold Nagarajah Quebec – West Island and Vaudreuil – Dorion
6 Shweta Uthayakumar York – Markham A
7 Kalaichelvi Sivasubramaniam York – Markham B
8 Joseph P. Antony York – Richmond Hill – Vaughan – King City
9 Cynthia Sri Pragash Peel – Brampton N and Orangeville
9 John Christie Anthonypillai Peel – Brampton N and Orangeville
10 None Peel – Brampton S
11 Shanthini Sivaraman Peel – Mississauga East
11 Vijayakumary Thurairajah Peel – Mississauga East
12 Sudesh Suren Mahendran Peel – Mississauga West and Milton
13 Wasanthaa Rohini Devi Karuppiah Toronto – Etobicoke West
14 Gopalakrishnan Arumugam Toronto – Etobicoke East
15 Kanagendran Kanagasabapathy Toronto – Scarborough – Beaches
15 Navaneshan Murugandy Toronto – Scarborough – Beaches
16 None Toronto – Scarborough-South
17 Ravirajani Nadarajah Toronto – Scarborough Centre
17 Sivani Ramesh Toronto – Scarborough Centre
18 Vaiyanthaluxmy Viyapuri Toronto – Scarborough-East;
18 Vijitharan Varatharajah Toronto – Scarborough-East;
19 Antony Sureshkumar Siluvairajah Toronto – Scarborough North
19 Kumuthini Kunaratnam Toronto – Scarborough North
20 Roy Harold St. Jude Gardiner Wignarajah Durham – Pickering – Whitby
20 Thaninayagam Shanmuganathan Durham – Pickering – Whitby
21 Jeyameera Karthick Durham – Ajax-Oshawa-Bowmanville
22 Ravichandran Mathy Mahalingam Outer GTA- Aurora-Newmarket – Stouffville – East Gwillimbury
23 None Outer GTA- Guelph-Kitchener-London-Waterloo
24 Kandasamy Sooriyakumaran West – Alberta – Manitoba
25 Gupenthiran Mahalingam West – British Columbia

 

இந்த தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த சிலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதை கனடாவுக்கான தேர்தல் ஆணையாளர் சிவபாலன் பாலசுந்தரம் தனது செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தினார்.

ஆனாலும் தமது விண்ணப்பங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் தமக்கு வழங்கப்படவில்லை என வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் சிலர் தேசியத்திடம் தெரிவித்தனர்.

நடைபெறவுள்ள கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற தேர்தல் மூலம் 12 நாடுகளில் இருந்து 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Related posts

Ontario, Quebec மாகாணங்களில் வெள்ள அபாயம்

Lankathas Pathmanathan

வருடாந்த பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan

தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment