Halifax நகரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
Halifax நகரத்தில் திங்கட்கிழமை (15) காலை பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை Halifax பிராந்திய காவல்துறை கைது செய்து குற்றஞ்சாட்டியுள்ளது.
வீதியை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை சாலையில் இருந்து அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்ட போது வெளியேற மறுத்த 21 பேரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 21 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இடையூறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்கள் எனவும் சிலர் மேலதிக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
April 15 அன்று கனடாவிலும் உலகெங்கிலும் பல நகரங்களில் நடைபெறும் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த போராட்டம் நிகழ்ந்தது.
இஸ்ரேலுக்கு நிதியளிக்கும் முக்கிய பொருளாதார மையங்களை தடுப்பதை குறிக்கோளாக கொண்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார தடையின் ஒரு பகுதியாக இந்த போராட்டம் நடந்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் அதன் ஆறாவது மாதத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.