Niagara Falls நகரில் சூரிய கிரகணத்தை காண திங்கட்கிழமை (08) 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.நகர முதல்வர் Jim Diodati இந்த தகவலை வெளியிட்டார்.
சூரிய கிரகணம் தோன்றிய தினம் Niagara Falls நகரில் கூடிய மக்கள்எண்ணிக்கை அவசர கால நிலை அறிவித்தல் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என நகர முதல்வர் தெரிவித்தார்.
Niagara Falls நகரில் திங்கட்கிழமை சூரிய கிரகணத்தைக் காண ஒரு மில்லியன் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நகரம் எதிர்பார்த்திருந்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே அன்றைய தினம் Niagara Falls நகரில் ஒன்று கூடினர்.
இதற்கு இரண்டு விடயங்கள் தடையாக இருந்தன என நகர முதல்வர் Jim Diodati கூறினார்.
சீரற்ற வானிலை, Niagara பிராந்தியத்தில் அறிவிக்கப்பட்ட அவசர கால நிலை அவை என Jim Diodati தெரிவித்தார்
அவசரகால நிலை குறித்து கடந்த மாதம் எடுக்கப்பட்ட முடிவு, மக்கள் வருகையை குறைத்தது எனவும் அவர் கூறினார்.
Niagara பிராந்தியத்தில் அமுலில் இருந்த அவசர கால நிலை திங்கட்கிழமை பிற்பகல் நீக்கப்பட்டது.
வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்வை எதிர்கொள்ள தயாராகும் வகையில் இந்த அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக Niagara பிராந்தியம் தெரிவித்தது