கனடாவின் சில பகுதிகளை திங்கட்கிழமை (08) ஒரு முழு சூரிய கிரகணம் கடக்க உள்ளது.
பகுதி சூரிய கிரகணத்தில் (partial solar eclipse) சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் தடுக்கிறது.
ஆனால் எந்த கிரகணமும் சூரியன் முழுவதுமாக மறைந்திருக்காத போது பகுதி கிரகணமாக ஆரம்பித்து பகுதி கிரகணமாக முடிவடையும்.
திங்கட்கிழமை சூரிய கிரகணத்தின் முழு பாதை Ontario, Quebec, New Brunswick, Prince Edward Island, Nova Scotia, Newfoundland and Labrador வழியாகச் செல்லும்.
இந்த சூரிய கிரகணம் சில பகுதிகளில் மேக மூட்டங்களினால் மூடப்பட்டிருக்கலாம்
என எதிர்வு கூறப்படுகிறது.
ஆனாலும் Quebec, Atlantic கனடாவில் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில், முழு சூரிய கிரகணத்தின் ஆரம்ப நேரம் (கிழக்கு நேரப்படி – ET) மாலை 3:12 மணி.
இதன் முழுமையின் பாதை மாலை 4:16 மணிக்கு முடிவடைகிறது.
மதியம் 1:40 மணி முதல் பகுதி கிரகணம் மாலை 5:18 மணி வரை தெரியும்.
முழு கிரகணத்தை பார்க்கும்போது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், சிறப்பு கண்ணாடிகளை அணியுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.