தேசியம்
செய்திகள்

$1.8 மில்லியன் மதிப்புள்ள 20 திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

$1.8 மில்லியன் மதிப்புள்ள 20 திருடப்பட்ட உயர் ரக வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதில் Toronto பெரும்பாக பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் மொத்தம் 38 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

கடந்த December மாதம், கனடா எல்லைச் சேவைகள் முகமையகத்துடன், Peel பிராந்திய காவல்துறை நடத்திய விசாரணயை அடுத்து இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகின.

திருடப்பட்ட வாகனங்கள் துபாய் மற்றும் ஓமானில் உள்ள துறைமுகங்களுக்கு அனுப்ப காத்திருத்தன என காவல்துறையினர் தெரிவித்தனர்.

March 26 அன்று, புலனாய்வாளர்கள் பல தேடுதல் உத்தரவுகளை நிறைவேற்றினர்.

இதில், Torontoவில் இருந்து இருவரும், Mississaugaவில் இருந்து ஒருவரும் கைதாகினர்.

கைதானவர்கள் 62 வயதான Fouad Shakhtour, 38 வயதான Ali Elfawair, 29 வயதான Harvir Boparai என அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Toronto தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபாய்கள் நிதி தமிழக அரசால் வழங்கல்

Lankathas Pathmanathan

கனடாவில் அதிகரிக்கும் யூத எதிர்ப்பு சம்பவங்கள்

Lankathas Pathmanathan

கட்சித் தலைமையிலிருந்து O’Toole விலக்கப்படுவாரா?

Gaya Raja

Leave a Comment