தேசியம்
செய்திகள்

இரண்டு பெண்கள் கடத்தப்பட்டது தொடர்பில் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு

Calgary நகரில் பெண்கள் குறி வைத்து கடத்தப்பட்து தொடர்பில் ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு இரண்டு அப்பாவி பெண்கள் கடத்தப்பட்டது குறித்து ஐந்து பேர் மீது Calgary காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

20 வயதுடைய பெண் ஒருவர் கடத்தப்பட்டது குறித்து May  2, 2023 முதல் காவல்துறையினர்  விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த கடத்தலுக்கு பழிவாங்கும் வகையில் இரண்டாவது பெண் ஒருவரும் கடத்தப்பட்டார்.

50 வயதான இவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.

இந்த பெண்கள் பல முறை தாக்கப்பட்டனர் என திங்கட்கிழமை (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இரண்டு கடத்தல்களும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் என Calgary காவல்துறையினர்  தெரிவித்தனர்.

ஒன்பது மாதங்கள் தொடர்ந்த விசாரணையின் பின்னர் இந்த கடத்தல் தொடர்பாக ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

ஹவாய்க்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்!

Lankathas Pathmanathan

மீண்டும் கடும் பனிப் பொழிவை எதிர்கொள்ளும் தெற்கு Ontario

Lankathas Pathmanathan

பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர்?

Lankathas Pathmanathan

Leave a Comment