February 22, 2025
தேசியம்
செய்திகள்

LCBO நிறுவனம் விற்பனை செய்யப்படாது: முதல்வர் Doug Ford

LCBO நிறுவனம் விற்பனை செய்யப்படாது என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

LCBO தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர் அதன் தனியார்மயமாக்கல் குறித்து பொய்யான தகவல்களை வெளியிடுவதாக முதல்வர் குற்றம் சாட்டினார்.

LCBO தொழிற்சங்க உறுப்பினர்கள் இந்த வாரம் மாகாண உறுப்பினர்கள் அலுவலகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

செவ்வாய்கிழமை (12) மாகாணம் தழுவிய போராட்டத்தில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது Etobicokeவில் உள்ள முதல்வரின் தொகுதி அலுவலகம் உட்பட 11 அரசு அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு மனுக்கள் வழங்கப்பட்டன.

Ontario மதுபானக் கட்டுப்பாட்டு வாரியம் – Liquor Control Board of Ontario – LBCO மாகாணம் முழுவதும் மதுபானங்களை விற்பனை செய்து விநியோகிக்கும் ஒரு நிறுவனமாகும்.

Related posts

தமிழ் சமூக மைய குடும்ப நன்கொடைத் திட்டம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் வகுப்பு கற்றலுக்குத் திரும்புவார்கள்: British Colombia

Lankathas Pathmanathan

Torontoவில் கடுமையான காற்று எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

Leave a Comment