தேசியம்
செய்திகள்

விமான விபத்தில் பலியான கனடியர்களின் அடையாளம் வெளியானது

Nashville அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பலியான 5 கனடியர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

Nashville நகரின் அருகே ஒற்றை இயந்திர விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் திங்கட்கிழமை (04) நிகழ்ந்தது.

இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விமான விபத்தில் கொல்லப்பட்ட 5 கனடியர்கள் Ontario மாகாணத்தின் King குடியிருப்புச் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் என அடையாளம் காணப்பட்டனர்.

பலியானவர்கள் Victor Dotsenko, அவரது மனைவி Rimma Dotsenko, அவர்களின் மூன்று பிள்ளைகள் என அடையாளம் காணப்பட்டனர்.

43 வயதான Victor Dotsenko, அவரது மனைவி 39 வயதான Rimma Dotsenko, அவர்களின் மூன்று பிள்ளைகளான
12 வயதான David Dotsenko, 10 வயதான Adam Dotsenko, 7 வயதான Emma Dotsenko ஆகியோர் மரணமடைந்ததாக Nashville காவல்துறை அறிவித்துள்ளது.

இவர்களின் இழப்பால் King Township  சமூகம் அழ்ந்த துக்கத்தில் உள்ளதாக நகர முதல்வர் Steve Pellegrini கூறினார்

அவசர தரையிறக்கத்தின் போது இந்த விமானம் விபத்துக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

விபத்து குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

மீண்டும் ஆர்மபித்த நாடாளுமன்ற அமர்வு

Lankathas Pathmanathan

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 500,000 குழந்தைகள் மருந்து

Lankathas Pathmanathan

Ontarioவில் கடந்த வாரம் 96 COVID மரணங்கள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment