Mississauga நகர முதல்வர் பதவியில் இருந்து Bonnie Crombie அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் விலகவுள்ளார்.
Ontario மாகாண Liberal கட்சியின் புதிய தலைவராக Bonnie Crombie சனிக்கிழமை (02) அறிவிக்கப்பட்டார்.
இந்த அறிவித்தல் வெளியான பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பதவி விலகல் குறித்த அறிவித்தலை அவர் வெளியிட்டார்.
பதவி விலகுவதற்கு முன் Mississauga நகரம், Peel பிராந்தியத்தின் வரவு செலவு திட்டம் உட்பட்ட விடயங்களை நிறைவு செய்த பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அவர் கூறினார்.
Bonnie Crombie, 2014 முதல் Mississauga நகர முதல்வராக இருந்து வருகிறார்.
அதற்கு முன்னர், அவர் நகர சபை உறுப்பினராகவும் Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
Ontario மாகாண Liberal கட்சியின் தலைவராவதற்கான தனது முயற்சியில் கவனம் செலுத்த அவர் நகர முதல்வர் அலுவலகத்தில் இருந்து விடுப்பு எடுத்திருந்தார்.