தேசியம்
செய்திகள்

Muskokaவில் இரண்டு வாகனங்கள் மோதியதில் ஐந்து பேர் பலி

Muskokaவில் இரண்டு வாகனங்கள் மோதியதில் ஐந்து பேர் பலியாகினர்.

கடந்த சனிக்கிழமை (25) இரவு 11 மணியளவில் நெடுஞ்சாலை 60 இல் இந்த விபத்து நிகழ்ந்தது.

பலியானவர்களில் நான்கு பேர் சீன குடிமக்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்கு உள்ளனதாக கூறப்படும் ஒரு வாகனத்தில் (Mercedes SUV) 15 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு வாலிபர்கள் இருந்ததாக காவல்துறையினர் முன்னர் கூறியிருந்தனர்.

North York, Richmond Hill பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

Huntsville நகரை சேர்ந்த Ford SUV வாகன சாரதியான 42 வயது பெண் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் 42 வயதான Jessica Ward என Muskoka Algonquin சுகாதார அதிகாரிகள் உறுதி செய்தனர்

பலியான ஏனைய நான்கு பேர் சீனாவின் குடிமக்கள் என்பதை Torontoவில் உள்ள சீன மக்கள் குடியரசின் துணைத் தூதரகம் உறுதிப்படுத்தியது.

ஆனாலும் பலியானவர்கள் குறித்த விபரம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த விபத்து குறித்த விசாரணை தொடரும் நிலையிலும் தனியுரிமை காரணங்களுக்காவும் மேலதிக தகவல்கள் பகிரப்பட்டது.

Related posts

பதவி விலகப் போவதில்லை: David Johnston

Lankathas Pathmanathan

British Colombia துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

Lankathas Pathmanathan

New Brunswick முதல்வருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment