காசா பகுதியில் உள்ள மக்களுக்கு உதவ ஒரு மனிதாபிமான ஒப்பந்தத்தின் அவசியத்தை கனடிய அரசாங்கம் வலியுறுத்துகின்றது.
காசா பகுதியில் உள்ள மக்களுக்கு உதவ ஒரு மனிதாபிமான ஒப்பந்தம் அவசரமாக தேவை என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை தற்காலிகமாக நிறுத்துமாறு Melanie Joly அழைப்பு விடுத்தார்.
Torontoவில் உள்ள கனடாவின் பொருளாதார கழகத்தில் திங்கட்கிழமை (30) ஆற்றிய உரை அவர் இந்த கோரிக்கையை முன் வைத்தார்
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸாவிற்குள் மேலதிக உதவிகள் வழங்குவதற்கு இது உதவும் என அவர் கூறினார்
அந்த பகுதியில் உள்ள தனது குடிமக்கள் வெளியேற உதவ வேண்டிய கடமை கனேடிய அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அவர் கூறினார்.
அந்த பகுதியில் உள்ள 499 கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது
காசாவில் பிடிபட்ட 200க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை விடுவிக்குமாறு அமைச்சர் Melanie Joly ஹமாஸை வலியுறுத்தினார்.
தொடர்ந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் இரண்டு கனடியர்களும் இதில் அடங்கலாம் என கூறப்படுகிறது