December 12, 2024
தேசியம்
செய்திகள்

புதிய சபாநாயகரை தெரிவு செய்யவுள்ள நாடாளுமன்றம்

கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் செவ்வாய்க்கிழமை (03) தெரிவாகவுள்ளார்.

ஏழு வேட்பாளர்கள் இந்த முக்கிய பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்;

Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Alexandra Mendes;
Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Greg Fergus;
Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Sean Casey;
Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Peter Schiefke;
Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont;
NDP நாடாளுமன்ற உறுப்பினர் Carol Hughes;
Green நாடாளுமன்ற உறுப்பினர் Elizabeth May.

இவர்களில் ஒருவர் கனடாவின் 38ஆவது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டவுள்ளார்.

கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் Anthony Rota கடந்த வாரம் பதவி விலகினார்.

இரண்டாம் உலகப் போரின்போது Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியருக்கு கனடிய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் பின்னணியில் இந்த பதவி விலகல் அறிவிக்கப்பட்டது.

உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கடந்த மாதம் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின் போது, கனடிய நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.

இந்த உரையின் போது  Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதன் பின்னணியில் சபாநாயகர் Anthony Rota பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சிகளும் அழைப்பு விடுத்தன.

இந்த தவறுக்கு முழு பொறுப்பேற்கிறேன் என Anthony Rota  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோரினார்.

இதனை தொடர்ந்து அவர் பதவி விலகினார்

அவருக்குப் பதிலாக புதிய சபாநாயகரை அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் செவ்வாய்க்கிழமை தெரிவு செய்யவுள்ளனர்.

Related posts

காணாமல் போயுள்ள சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்

Lankathas Pathmanathan

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பாலஸ்தீனிய ஆதரவு போராட்டம் Torontoவில்!

Lankathas Pathmanathan

தமிழ் இளைஞரின் மரணம் தொடர்பாக மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment