தேசியம்
செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி இந்த வாரம் கனடாவிற்கு பயணம்

உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy இந்த வார இறுதியில் கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தனது கனடிய பயணத்தில் அவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி வியாழக்கிழமை (21) கனடாவை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (22) காலை அவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவார் என் கூறப்படுகிறது.
பின்னர் அவர் Torontoவுக்கு பயணித்து அங்கிருந்து வெள்ளி இரவு மீண்டும் உக்ரைன் பயணிப்பார் என் தெரியவருகிறது.

உக்ரைன் ஜனாதிபதி சுமார் 24 மணி நேரம் கனடாவில் தங்கியிருப்பார் என் கூறப்படுகிறது

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் அவர் கனடாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

இந்த பயணம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி Joe Bidenனுடன் சந்திப்பை தொடர்ந்து Volodymyr Zelenskyy கனடா  வரவுள்ளார்.

Related posts

உலங்குவானூர்தி விபத்தில் மரணமடைந்தவர்களின் பெயர்கள் வெளியாகின

Lankathas Pathmanathan

Ontario மாகாண இலையுதிர் கால பொருளாதார அறிக்கை

Lankathas Pathmanathan

Pharmacare சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment