Calgaryயில் முறையிடப்பட்ட E. coli நோய் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பல Calgary குழந்தை பராமரிப்பு நிலையங்களில் ஏற்பட்ட நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
ஞாயிற்றுக்கிழமை (10) 190 பேராக அறிவிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை (11) பிற்பகல் 231 பேராக அதிகரித்துள்ளது.
21 குழந்தைகளுக்கு கடுமையான hemolytic uremic syndrome (HUS) நோய் உள்ளதாக கூறப்படுகிறது.
திங்கள் பிற்பகல் நிலவரப்படி, 25 குழந்தைகள்,ஒரு பெரியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக Alberta சுகாதார மையம் (Alberta Health Services – AHS) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நோய்த்தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 பேர் வீடு சென்றுள்ளனர்.