December 12, 2024
தேசியம்
செய்திகள்

800 காட்டுத்தீ தொடர்ந்து கட்டுக்குள் இல்லாத நிலை தொடர்கிறது!

கனடாவில் 800 காட்டுத்தீ தொடர்ந்து கட்டுக்குள் இல்லாத நிலை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

September மாதம் காட்டுத்தீ குறைவதற்கு எந்த அறிகுறியும் இல்லை என மத்திய அதிகாரிகள் எச்சரித்தனர்.

September 6 ஆம் திகதி நிலவரப்படி, கனடா முழுவதும் 1,052 காட்டுத் தீ பரவி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவற்றில் 791 காட்டுத்தீ  கட்டுப்பாட்டை இழந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு நாடு முழுவதும் 6,174 காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இவற்றில் இரண்டு ஒரு மில்லியன் hectareரைத் தாண்டியுள்ளதாக கனடா இயற்கை வளத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்த பருவத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 284 வெளியேற்ற உத்தரவு நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது மொத்தம் 232,209 கனேடியர்கள் அவர்கள் இல்லங்களில் இருந்து வெளியேற்ற தூண்டியது.

Related posts

Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும் புதிய COVID மாறுபாடு

Lankathas Pathmanathan

June மாதம் கனடாவில் 230,700 புதிய தொழில் வாய்ப்புகள்!

Gaya Raja

Quebec மொழி சீர்திருத்த மசோதா சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

Leave a Comment