February 22, 2025
தேசியம்
செய்திகள்

பெரும் உயர்வை எதிர்கொள்ளும் எரிபொருளின் விலை

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை இந்த வாரம் பெரும் உயர்வை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமைக்குள் (11) எரிபொருளின் விலை கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது

Toronto பெரும்பாகத்தை தாண்டி தெற்கு Ontarioவின் பெரும்பகுதி குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எரிபொருளின் விலை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது

வியாழக்கிழமை (10) எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றிற்கு 1.71 சதமாக அதிகரிக்கும்.

இது புதன்கிழமை (09) எரிபொருளின் விலையை விட 4 சதம் அதிகரிப்பாகும்.

வியாழக்கிழமை இரவு எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கவுள்ளது.

இதன் மூலம் வெள்ளிக்கிழமை (11) எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றிற்கு 1.73 சதம் வரை அதிகரிக்கும்.

இது கடந்த November மாதத்தின் பின்னரான அதி கூடிய எரிபொருளின் விலையாக இருக்கும்.

Related posts

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபிக்கி இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு

Lankathas Pathmanathan

இரண்டாம் காலாண்டில் பொருளாதாரம் 3.3 சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan

GO புகையிரதத்தின் கூரையில் இருந்து விழுந்த 15 வயது சிறுவன்

Lankathas Pathmanathan

Leave a Comment