Titanic கப்பலைக் காண நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற ஐந்து பேரின் மரணம் குறித்து கனேடிய அதிகாரிகள் ஆராயவுள்ளனர்.
Titanic கப்பலைக் காண கடலுக்குள் சென்ற நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியத்தில் அதில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்ததாக வியாழக்கிழமை (22) அறிவிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) Titanic கப்பலை காண Atlantic பெருங்கடலில் தனியாரால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல் Titan சென்றது.
ஐந்து பேருடன் கடலுக்குள் சென்ற இந்த நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன நிலையில் ஐந்து நாட்களாக தேடல், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேடுதல் நடவடிக்கையில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் கனடாவும் ஈடுபட்டிருந்தது.
இந்த நிலையில் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தவர்களின் மரணத்திற்கான காரணம் குறித்து ஆராயப்படும் என கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெள்ளிக்கிழமை (23) தெரிவித்துள்ளது.
இதில் மீட்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக கனேடிய கடலோர காவல்படை கப்பல் தேடுதல் பகுதியில் இருக்கும் எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.