February 23, 2025
தேசியம்
செய்திகள்

காட்டுத்தீ காரணமாக வெளியேற்றப்பட்ட பலர் மீண்டும் வீடு செல்ல அனுமதி

காட்டுத்தீ காரணமாக வெளியேற்றப்பட்ட பலர் மீண்டும் வீடு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

வடகிழக்கு British Colombiaவில் இருந்து வெளியேற்றப்பட்ட 2,400 பேர் மீண்டும் வீடு செல்ல வியாழக்கிழமை (15) அனுமதிக்கப்பட்டனர்.

Tumbler Ridge நகராட்சிக்கான இந்த வெளியேற்ற உத்தரவு கடந்த வாரம் வியாழக்கிழமை (08) அமுலுக்கு வந்தது .

அதேவேளை Edson Alberta, Yellowhead County வாசிகள் மீண்டும் வீடு திரும்ப வியாழனன்று அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த 9ஆம் திகதி இந்த பகுதியில் இருந்து 8 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது.

ஆனாலும் இந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.

அங்கு வசிப்பவர்கள் குறுகிய அறிவிப்பில் வெளியேற தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

Playoff தொடருக்கு தகுதி பெற்ற Toronto Blue Jays!

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போராட்டம் தொடர்கிறது

Lankathas Pathmanathan

Walmart கனடா தனது ஆறு கடைகளை மூடவுள்ளது

Gaya Raja

Leave a Comment