தேசியம்
செய்திகள்

Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றம்

தொடர் கொலையாளி Paul Bernardo Quebecகில் உள்ள நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்.

ஒரு தசாப்த காலமாக, Ontarioவில் உள்ள இரண்டு அதிகபட்ச பாதுகாப்பு சிறைகளில் Paul Bernardo தடுத்து வைக்கப்பட்டார்.

இந்த வாரம் அவர் Quebecகில் உள்ள நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த இடமாற்றத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

1990களின் ஆரம்பத்தில் 15 வயது Kristen French, 14 வயது Leslie Mahaffy ஆகிய இருவரை கடத்தி, கற்பழித்து, சித்திரவதை செய்து, கொலை செய்ததற்காக Paul Bernardoவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts

250 வாக்குகளினால் வெற்றியை தவற விட்ட தமிழர்!

Gaya Raja

மேற்கு Ottawa வெடிப்புச் சம்பவங்களில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு கவச வாகனங்களை வழங்குவதில் கனடா முன்னணியில் இருக்க முடியும்: பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment