February 21, 2025
தேசியம்
செய்திகள்

Alberta தேர்தல் முடிவு குறித்து அரசியல்வாதிகள் கருத்து

Alberta மாகாண முதல்வராக மீண்டும் தெரிவாகியுள்ள Danielle Smithக்கு அரசியல்வாதிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Alberta மாகாண தேர்தலில் United Conservative கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது.

பிரதமர் Justin Trudeau, துணைப் பிரதமர் Chrystia Freeland, சுற்றுச்சூழல் அமைச்சர் Steven Guilbeault, Conservative தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோர் Alberta தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்தனர்.

Danielle Smith தலைமையிலான மாகாண அரசாங்கத்துடன் பணியாற்ற தயாராக உள்ளதாக பிரதமர் Justin Trudeau தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.

Alberta அரசாங்கத்துடன் வேறுபாடுகளை தீர்க்க முடியும் என சுற்றுச்சூழல் அமைச்சர் Steven Guilbeault நம்பிக்கை தெரிவித்தார்.

Alberta வாக்காளர்கள் NDP-Liberal கூட்டணியை நிராகரித்துள்ளனர் என Pierre Poilievre கூறினார்.

இந்த நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து Jagmeet Singh ஏமாற்றம் வெளியிட்டார்.

Related posts

4.5 சதவீதமாக அதிகரிக்கும் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

அவசர கால சட்டத்தை நீதிமன்றத்தில்  எதிர்க்குமா Saskatchewan?

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  அஞ்சலி அப்பாதுரை

Gaya Raja

Leave a Comment