February 22, 2025
தேசியம்
செய்திகள்

காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு

Ontario மாகாணத்தின் Cobourg நகருக்கு அருகில் நேற்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

Cobourg நகருக்கு வடக்கில் உள்ள ஒரு நகரத்தில் வியாழக்கிழமை (25) மாலை இந்த குழந்தை காணாமல் போனதாக Ontario காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட முகவரியில் குழந்தை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

இந்த குழந்தை இறந்ததற்கான காரணம் வெளியாகவில்லை.

இந்த மரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

OPP இன் குற்றப் புலனாய்வுப் பிரிவு, Ontario தலைமை மரண விசாரணை அதிகாரியின் அலுவலகத்துடன் இணைந்து இந்த விசாரணையை முன்னெடுக்கிறது.

இதில் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

CSIS தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

கனேடிய மேலவை உறுப்பினர்கள் மீது ரஷ்யா தடை உத்தரவு

தடுப்பூசி பெறவில்லையா? விமானங்களிலும் புகையிரதங்களிலும் பயணிக்கத் தடை!

Lankathas Pathmanathan

Leave a Comment