கனேடிய அரசியல் தலைவர்களை சீன அரசாங்கம் குறிவைக்கிறது என கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை தெரிவிக்கின்றது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துக் கட்சிகளிலிருந்தும், அனைத்து மட்டங்களிலிருந்தும் அரசியல் தலைவர்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி குறிவைக்கிறது என CSIS தெரிவிக்கின்றது.
ஆனால் இந்த அச்சுறுத்தல்கள் அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எல்லையை இன்னும் கடக்கவில்லை எனவும் புலனாய்வு சேவை கூறியது.
இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை வெளிநாட்டு குறுக்கீடு அச்சுறுத்தல்களை அடையாளம் காணவும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் CSIS உறுதி பூண்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong மீதான அச்சுறுத்தல் குற்றச்சாட்டில் சீன இராஜதந்திரி ஒருவர் கனடாவிலிருந்து கடந்த திங்கட்கிழமை வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.