Alberta மாகாண தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
மாகாண தேர்தலை ஒத்தி வைத்து காட்டுத்தீயில் கவனம் செலுத்துமாறு Yellowhead மாவட்ட முதல்வர் Wade Williams அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய நிலையில் இந்த தேர்தல் ஒரு கவனச்சிதறல் என அவர் கூறினார்.
காட்டுத்தீ காரணமாக Yellowhead மாவட்டத்தில் வசிக்கும் சிலர் எட்டு முதல் 10 நாட்களாக தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (09) மதியம் வரை Alberta முழுவதும் 88 காட்டுத்தீ முறையிடப்பட்டுள்ளது.
செவ்வாய் பிற்பகல் வரை 24 ஆயிரம் பேர் காட்டுத்தீயின் காரணமாக மாகாண ரீதியில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீ காரணமாக சனிக்கிழமை மாலை Alberta மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.