சூடானில் இருந்து 58 கனடியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சூடானில் தொடரும் வன்முறைக்கு மத்தியில் கனேடியர்களை வெளியேற்ற கனடிய வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.
இந்த வகையில் ஜெர்மன் விமானம் ஒன்றில் 58 கனடியர்கள் திங்கட்கிழமை (24) வெளியேற்றப்பட்டனர்.
பிரதமர் Justin Trudeau இன்று இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
தொடர்ந்தும் கனேடிய குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகளில் நட்பு நாடுகளுடன் இணைந்து கனடா செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் பதிவு செய்துள்ள சூடானில் உள்ள அனைத்து கனேடியர்களையும் தொடர்பு கொள்ள கனடா முயற்சிப்பதாக வெளியுறவு அமைச்சர் Melanie Joly திங்களன்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சூடானில் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட 72 மணி நேர யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அறிவிப்பை கனடா வரவேற்றுள்ளது.